TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?

TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
News Image

Tamil Nadu By Election 2026: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஆளுங்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டிற்கும் அரசியல் புதுமுகமான தவெக அதிர்ச்சி அளித்தது. இந்த தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு திமுக-வும், 3வது இடத்திற்கு அதிமுக-வும் தள்ளப்பட்டது.

இடைத்தேர்தல்:

தவெக மீது எதிர்க்கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் மிகவும் அதிருப்தியிலும் ஆதங்கத்திலும் உள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், விராலிமலை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்த வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தவெக-வை வீழ்த்த வேண்டும் என்று திமுக மிகவும் மும்முரமாக உள்ளனர்.

இந்த சூழலில், திமுக தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அம்பாசமுத்திரத்தில் சீமான்?

இந்த திட்டம் நிறைவேறினால் அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், காரைக்குடி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்றது.

இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொதுவேட்பாளராக களமிறக்க முடிவு செய்துள்ளனர். ஏனென்றால், இந்த தொகுதியில் போட்டியிட்ட தவெக, காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய இசக்கி சுப்பையா 3 பேரும் தற்போது ஓரணியில் உள்ளனர். இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரன் 14 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்றார்.

தொண்டர்கள் ஏற்பார்களா?

இந்த தொகுதியில் நாடார் சமுதாய வாக்குகளும் அதிகளவு உள்ளது. இதனால், சீமான் நேரடியாக களமிறங்கினால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருக்கும் என்று திமுக கணக்கு போட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் அதிகளவு திமுக-வை விமர்சிக்கவில்லை. மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சீமானுக்கு குழந்தை பிறந்ததற்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று சீர் செய்தார். இந்த சம்பவங்கள் திமுக-வுடன் சீமான் இணக்கமாக செல்வதையே குறிக்கிறது.

அதேசமயம், திராவிட கட்சிகளை மிக கடுமையாக விமர்சிக்கும் சீமான் குறிப்பாக திமுக-வை மிக கடுமையாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி அதே திமுக-வின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சீமானே களமிறங்கினால் அது அவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks