உலகத்தில் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த விளையாட்டுப் போட்டியை கொண்டாடும் விதமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை நடத்தப்படுகிறது.

2026ம் ஆண்டுக்கான உலக்கோப்பை நாளை நடக்கும் முதல் போட்டியில் மெக்ஸிகோ - தென் அமெரிக்கா அணிகள் மோதுகின்றனர்.

இந்த உலகக்கோப்பை குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கீழே காணலாம்.

1. 39 - 48 - 104:

இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி மொத்தம் 39 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உலகக்ககோப்பையில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றனர். மொத்தமாக இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றில் 72 போட்டிகள், நாக் அவுட்டில் 32 போட்டிகள் என மொத்தம் 104 போட்டிகள் நடைபெறுகிறது.

2. 891 புதுசுகள்:

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 1248 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் 357 பேர் உலகக்கோப்பையில் ஏற்கனவே ஆடிய அனுபவமிக்கவர்கள். முதன்முறையாக 891 பேர் உலகக்கோப்பையில் களமிறங்க உள்ளனர்.

3. முதன்முறையாக 3 நாடுகளில்:

பொதுவாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது ஒரே நாடுகளில் நடத்தப்படுவது வழக்கம். ஏனென்றால், அடுத்தடுத்து போட்டிகள் நடக்கும் என்பதால் இதுபோன்ற ஏற்பாடுகள் நடக்கும். இந்த முறை முதன்முறையாக 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து நடக்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகளில் இந்த உலகக்கோப்பை கால்பந்து நடக்கிறது.

4. பிரேசிலின் பெருமை:

உலகக்கோப்பை கால்பந்தை அதிக முறை வென்ற அணி என்ற பெருமைக்குரிய பிரேசில் அணி தன்வசம் மற்றொரு பெருமையை வைத்துள்ளது. 1923ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. அப்போது முதல் தற்போது வரையிலான 23 உலகக்கோப்பைத் தொடரிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் மட்டுமே ஆகும்.

5. புதிய வரவு:

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் ஏதாவது அணிக்கு விளையாட வாய்ப்பு கிட்டும். அந்த வகையில் நடப்பு உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு பெற்ற அணியாக கேப் வெர்டே, குராசோ, ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன்முறையாக உலகக்கோப்பையில் ஆட கிடைத்த வாய்ப்பில் அவர்கள் இந்த முறை களமிறங்குகின்றனர்.

6. பரிசுத்தொகை:

இந்த உலகக்கோப்பையில் மொத்த பரிசுத்தொகையாக ரூபாய் 6 ஆயிரத்து 244 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு மட்டும் ரூபாய் 477 கோடி பரிசாக வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 315 கோடியும், 3வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 276 கோடியும், 4வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூபாய் 257 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Source: Read Full Article