நடந்து முடிந்த தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டணி அமைய முக்கிய பங்காற்றிய திமுக இல்லாமல் முதல் முறையாக கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னார் தலைவர் கார்கே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கொல்கத்தா முன்னார் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திருமாவளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எதிர்க்கட்சி கூட்டணிகளில் வலிமையாக இருந்த திரிணாமூல், இடதுசாரிகள், திமுகவின் வெற்றியை பாதித்துள்ளதாகவும் இதனால் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பாட்டுள்ளதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்தார். கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் மேற்கொண்ட அணுகுமுறையால் திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை பலவீனம் அடையச் செய்ததாகவும் காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்து ஒற்றுமையை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாளவன் வலியுறுத்தியுள்ளார். திருமாவளவனின் இந்தப் பேச்சால் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

Also Read| DMK Alliance plan : இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலேயே திருமாளவன் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியலில் பேசும்பொருளாகிவிட்டதால் காங்கிரஸ் இதற்கு விரைவில் பதில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, காங்கிரஸில் துரோகச் செயலால் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று காலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source: Read Full Article