தவெக மின்மினிப்பூச்சி, ஆட்சி புதுப்பொண்ணு: செல்லூர் ராஜூவின் அதிரடி விமர்சனம்!

தவெக மின்மினிப்பூச்சி, ஆட்சி புதுப்பொண்ணு: செல்லூர் ராஜூவின் அதிரடி விமர்சனம்!
News Image

சிறு பிள்ளை விவசாயம் வீடு போய் சேராது என்பது போலவும், திருமணமான புதுப்பொண்ணு போன்று தற்போதைய ஆட்சி உள்ளது - தவெக மின்மினிபூச்சி போன்று தான் உள்ளது - தவெக குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகர அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர்ராஜூ...," திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறோம். புரட்சித்தலைவருக்காக, அதிமுகவிற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் உதவியாக இருந்து அரும்பாடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகிய இருவரின் மறைவுக்கு மாநகர் மாவட்ட கழக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதிமுகவில் இருந்து மாற்றுக்கட்சிக்கு சிலர் சென்றுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஆட்களை நியமிக்க வேண்டும்; எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் நூற்றாண்டு மக்களுக்காக இருக்கும் என அம்மா சொன்னது நடக்கும்.

தவெகவிற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு

புரட்சித்தலைவருக்காக கையில் பச்சை குத்தியவர், இப்போது போல டாட்டூ கிடையாது. அதனால் நான் எங்கும் செல்லமாட்டேன். அதிமுகவில் கடைசி வரை தொண்டனாக கூட இருப்பேன் ; என்னை பற்றி கேலி கிண்டல் பண்ணுவாங்க அதை பற்றி நான் கவலைபடுவதில்லை என்றார்.

திமுக அதிமுக இணையும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு?

திமுக அதிமுக குறித்து பேச நிர்மல்குமார் என் திமுக அதிமுகவின்   தூதுவரா? அமைச்சர் ரொம்ப பேசுகிறார்! எங்கள் கட்சியில் இருந்தார் அவர் அங்கு சென்று அமைச்சர் ஆகிவிட்டார்,்அமைச்சர் சொகுசாக செல்லும் சாலைகள் பாலங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்தது தான்; நாங்கள் கொண்டுவந்த திட்டத்தை செயல்படுத்தினாலே போதுமானது; மதுரைக்கு அமைச்சராக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என சொல்லுங்கள் என்றார்.

போக போக சரியாகிவிடும்

விஜய் அதிமுக பேனரை வைத்து தான் பேசினார், அது எங்களது வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்களுடைய வாக்குகள் தான் தவெகவிற்கு சென்றது இனி அது நடக்காது. புதிதாக கல்யாணம் ஆன புதுப்பொண்ணு இருப்பது போல இப்போதைய ஆட்சி உள்ளது. போக போக சரியாகிவிடும்

அதிமுகவில் நிர்வாகிகள் தவெகவில். இணைவது குறித்த கேள்விக்கு?

அதிமுக கட்சி பாசமான கட்சி குடும்பமான கட்சி, அனைவரும் நண்பர்களாக, பிள்ளைகளாக, தம்பிகளாக இருந்தார்கள், எதற்காக சென்றார்கள் என தெரியவில்லை என்றார். அதிமுகவில் இருந்து தொண்டர்கள் வெளியேறவில்லை தவெக மின்மினிப்பூச்சி, பட்டாம்பூச்சி போல கானல் நீராக மாறும்  என்றார்.

தவெகவின் வெற்றி குறித்த கேள்விக்கு?

6 சிலண்டர், நகை என தேர்தல் வாக்குறுதியை தவெக அள்ளி வீசினார்கள்அப்பாடா எவ்வளவு வாக்குறுதி என மதுர காரங்க பாசக்காரங்கனு நெனச்சு தவெகவிற்கு ஓட்டு போட்டுடாங்க என்றார..

திரிஷாவிற்கு பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ;

பெண்களை இழிவுபடுத்தக்கூடாது, பெண்களை மதிக்கும் கட்சி அதிமுக. நீங்கள் தேர்ந்தெடுத்து முதலமைச்சர் எதையாவது செய்தால் குத்துதே குடையுதேனு சொல்வாங்க. அப்படிதான் இருக்கும் பின்னர் தான் மாற்றம் வரும் என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks