ஏபிபிநாடு ‘இம்பாக்ட்’: திருவிடைமருதூர் மருத்துவமனை வளைவில் சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கள் அகற்றம்

ஏபிபிநாடு ‘இம்பாக்ட்’: திருவிடைமருதூர் மருத்துவமனை வளைவில் சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கள் அகற்றம்
News Image

ABPNadu ‘Impact’: திருவிடைமருதூர்: ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை திருப்பத்தில் சிதறி கிடந்த ஜல்லிகளை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சுத்தம் செய்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். செய்தி வெளியிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்த ஏபிபிநாடு செய்திதளத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் முக்கிய வழித்தடத்தில், திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை வளைவுப் பகுதியில் சாலையில் ஜல்லிக்கற்களால் சிதறிக்கிடந்தன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். எந்நேரமும் விபத்து ஏற்படும் அச்சத்திலேயே மக்கள் இப்பகுதியைக் கடந்து சென்று வந்தனர்.

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை பகுதியில் மிகவும் குறுகலான இந்த வளைவுச் சாலையில் ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் துகள்கள் பரவலாக சிதறிக் கிடந்ததால் வாகனங்கள் திருப்பும் போது விபத்து ஏற்படும் நிலை நிலவி வந்தது. கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் இந்தச் சாலையில் 24 மணி நேரமும் பேருந்துகள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும். இத்தகைய பரபரப்பான பிரதான சாலையில், அதுவும் வளைவில் கற்கள் சிதறி கிடப்பது விபத்துகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது போல் அமைந்தது. முக்கியமாக இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சறுக்கி விழுந்து படுகாயமடைந்த சம்பவங்களும் நடந்து வந்தது.

இந்த வளைவில் திரும்பும் இருசக்கர வாகனங்கள், சாலையில் கிடக்கும் சிறு கற்களின் மீது ஏறும் போது நிலைதடுமாறி உடனடியாக சறுக்கி விடுகின்றன. குறிப்பாக, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, கற்கள் இருப்பது தெரியாமல் வந்து பிரேக் பிடிக்கும் போது பல வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். முதியவர்கள் மற்றும் பெண்களின் நிலை இதனால் மோசமாக இருந்து வந்தது.

இந்த திருப்பத்தின் அருகிலேயே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், இந்த வளைவில் வேகமாகத் திரும்ப முடியாமல் திணறுகின்றன. வேகமாகத் திரும்பினால் வளைவில் ஆம்புலன்ஸ் சறுக்கும் அபாயம் இருப்பதால், மிக மெதுவாகவே இயக்க வேண்டிய இருந்தது. இதனால், அவசர சிகிச்சைக்கான பொன்னான நேரம் (Golden Hour) வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர்.

கனரக வாகனங்களான பேருந்து மற்றும் லாரிகள் இந்த வளைவைக் கடக்கும் போது, அவற்றின் பெரிய டயர்களில் இந்த ஜல்லிக்கற்கள் மாட்டிக்கொள்கின்றன. பின்னர், வாகனத்தின் வேகத்தால் விடுபடும் கற்கள், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் மீதும், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளின் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் போல அதிவேகமாகப் பாய்ந்து முகத்திலும், கண்ணிலும் அடிபட்டுப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைக்கு நடந்து செல்லும் உள்நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த வளைவைக் கடக்கும் போது, எங்கே தங்கள் மீது கற்கள் பாயுமோ அல்லது ஏதேனும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தங்கள் மீது மோதிவிடுமோ என்ற அச்சத்திலேயே சாலையைக் கடக்க வேண்டிய நிலை நீடித்து வந்தது.

இப்பகுதியில் பெரிய அளவில் ஏதேனும் உயிர்ச்சேதமோ அல்லது விபத்தோ ஏற்படுவதற்கு முன்னதாக, நெடுஞ்சாலைத்துறையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாகச் சாலையில் சிதறிக் கிடக்கும் கற்களை அகற்றி, சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது. உடனடியாக தஞ்சை கலெக்டர் ரேவதி உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் பேரூராட்சி அலுவலர்கள் உடன் அரசு மருத்துவமனை திருப்பத்தில் சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்களை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்தினர்.

இதையடுத்து செய்தி வெளியிட்ட ஏபிபிநாடு நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். உயிர்பலி ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுத்த தஞ்சை கலெக்டர் ரேவதிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks