தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், நெல்லை மேயர் அறையில் முதல்வர் படம் வைக்கப்பட்டது. ஆனால், மேயர் தனது அலுவல் பணிகளை தனது இருக்கையில் இருந்து பார்க்காமல் அருகே புதிய அமர்விடம் அமைத்து பணிகளை பார்த்து வருவதால் மீண்டும் சர்ச்சை நிலவி வருகிறது.

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் அவரது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்கப்பட்டு வரும் சூழலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் முதல் அமைச்சர் படம் வைப்பதில் இன்றும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர். மாநகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் கடும் இழுபறிக்கு பின்னர் தமிழக முதலமைச்சரின் புகைப்படம் மேயர் அறையில் மாற்றப்பட்டது. இருந்தபோதிலும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் ராமகிருஷ்ணன் கூட்டரங்கு மேடையில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் வைத்து நடத்தினார். இதுவும் பெரும் சர்ச்சையாக உருவான நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் புகைப்படம் மேயர் அறையில், மேயர் இருக்கைக்கு மேல் மாற்றப்பட்டுள்ள சூழலில் அந்த இடத்தையும் இருக்கையையும் அலுவல் பணிக்கு அவர் பயன்படுத்தாமல், அதே அறையில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்து தனது அலுவல் பணிகளை அவர் பார்த்து வருகிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read| DMK Alliance plan : இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?

தமிழக முதலமைச்சர் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணி செய்ய மேயருக்கு விருப்பம் இல்லையா என்ற கேள்விகளை எழுப்பியும் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தின்பால் செயல்பட வேண்டும். அரசியல் விருப்பு வெறுப்புகளை கடந்து தங்களது பதவியேற்பு உறுதிமொழியை மீறி செயல்படுவது கண்டனத்திற்கு உரியது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரின் புகைப்படம் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் அலுவலகத்தில் வைப்பதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்தும் பெரும் சர்ச்சையாகவே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article