கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்வராயன் மலை. இந்த மலையைச் சுற்றி பல்லாயிரக்கபினணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரிப்பு நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் 68 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

கல்வராயன் மலையில் ஆதவ் அர்ஜுனா:

இந்த சூழலில், கல்வராயன் மலைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்றார். அவர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு படித்து வரும் மாணவி ஒருவரின் இல்லத்தில் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர், அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்ட ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் கூறியதாவது,

முதலமைச்சரிடம் அனைத்து கோப்புகளையும் கொடுத்துள்ளோம். அவர்தான் அனுப்பியுள்ளார். கண்டிப்பாக இந்த ஊரை மொத்தமாக சரி செய்வோம். இந்த இடத்தில் கள்ளச்சாராயம் ஒரு துளிகூட இருக்கக்கூடாது. இதான் குறிக்கோள் என்றார்.

லஞ்சப்புகார் அளித்த பொதுமக்கள்:

அப்போது, அங்கே இருந்த பொதுமக்களில் ஒருவர் லஞ்சம், ஊழல் அதிகமாக இருக்கிறது? வீடு வருிறது என்றால் அதற்கு பணம் வாங்குகிறார்கள், காசு கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மலையைப் பொறுத்தவரையில் படிப்பறிவு அதிகம் இல்லாததால் இந்த மலையில்தான் லஞ்சம் அதிகமாக வாங்குகிறார்கள் என்றார்.

லஞ்சம் கொடுக்கக்கூடாது:

இதைக்கேட்ட ஆதவ் அர்ஜுனா, யாருக்கும் இனிமேல் எந்த காசும் கொடுக்க வேண்டாம். தைரியமாக இருங்கள். ஏதாவது ஒன்று என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள். நானே நேரடியாக பார்த்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் குறிக்கோள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது. என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? அந்த அதிகாரிகளிடம் எல்லாம் கூறுங்கள். நாங்கள் வந்துவிட்டு சென்றோம் என்று கூறுங்கள்.

இவ்வாறு அவர் உத்தரவாதம் அளித்தார்.

கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு போதியளவு படிப்பறிவு இல்லாத காரணத்தாலே வருவாய்க்கு வழியின்றி சரியான வேலை கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள்:

தமிழ்நாட்டில் இன்றளவும் பல்வேறு மலைக்கிராமங்களில் போதுமான அளவு போக்குவரத்து வசதி, சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதை சரி செய்து தருமாறு பல ஆண்டுகளாக அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திமுக, அதிமுக இல்லாமல் தமிழ்நாட்டில் முதன்முறையாக அமைந்துள்ள தவெக ஆட்சியில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

Source: Read Full Article