வீரபாண்டி குடும்பத்தில் கோதாவரி.. ஒரு சீட்டுக்கு 5 பேர் குஸ்தி! சேலம் திமுக-வில் உச்சகட்ட டென்ஷன்.. உள்ளடி வேலையால் பின்னடைவா?

வீரபாண்டி குடும்பத்தில் கோதாவரி.. ஒரு சீட்டுக்கு 5 பேர் குஸ்தி! சேலம் திமுக-வில் உச்சகட்ட டென்ஷன்.. உள்ளடி வேலையால் பின்னடைவா?
முன்னாள் அமைச்சரின் வாரிசுகளிடையே நிலவும் கோஷ்டி பூசல் - அதிருப்தியில் தலைமை: பொதுவான வேட்பாளரை களம் இறக்க ஸ்டாலின் மாஸ்டர் பிளான்?

சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சேலம் மாவட்ட திமுக-வில் வீரபாண்டி குடும்பத்தினரிடையே நிலவும் அதிகாரப் போட்டி இப்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒரே தொகுதிக்கு சீட் கேட்டு மல்லுக்கட்டி வருவது, அறிவாலய வட்டாரத்தில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோஷ்டி பூசலால் வீரபாண்டி தொகுதி மீண்டும் அதிமுக வசமாகிவிடுமோ என்ற அச்சத்தில் உடன்பிறப்புகள் டென்ஷன் ஆகிப் போயுள்ளனர்.


சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் தற்போது அதிமுக-வின் ராஜமுத்து சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், கட்சிக்குள்ளேயே நடக்கும் ‘குஸ்தி’ பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழி, மகன் பிரபு, மருமகன் தருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர் என மொத்தம் ஐந்து பேர் விருப்ப மனு அளித்து, தற்போது சென்னையில் முகாமிட்டு ‘பவர்ஃபுல்’ லாபி செய்து வருகின்றனர்.


இதில் மிகப்பெரிய ‘டுவிஸ்ட்’ என்னவென்றால், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த வீரபாண்டி தொகுதிக்கான நேர்காணலில் பங்கேற்காத பிரபு மற்றும் அருண் ஆகியோர், திடீரென சேலம் மேற்குத் தொகுதிக்கான நேர்காணலில் ஆஜராகி பரபரப்பைக் கிளப்பினர். இது கட்சித் தலைமைக்கு கடும் எரிச்சலை ஊட்டியுள்ளதாகத் தெரிகிறது. “ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் ஆசைப்பட்டால், யாருக்குக் கொடுத்தாலும் மற்றவர்கள் உள்ளடி வேலை பார்ப்பார்களே?” என்ற சந்தேகம் திமுக மேலிடத்திற்கு எழுந்துள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் குமுறுகையில், “வீரபாண்டி ஆறுமுகம் ஐயா காலத்தில் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, இன்று வாரிசுச் சண்டையால் பலவீனமாகிவிட்டது. ஒருவருக்கு ‘சீட்’ கொடுத்தால் மற்றவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது ‘ஓப்பன் சீக்ரெட்’. இவர்களின் ஈகோ மோதலால் தொகுதி மீண்டும் அதிமுக-வுக்கே தாரை வார்த்து கொடுக்கப்படுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. இவர்களைத் தவிர்த்துவிட்டு பொதுவான ஒரு ‘மாஸ்’ வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம்” என ஆவேசமாகத் தெரிவித்தனர்.


இந்தக் குடும்பப் பூசலால் சேலம் மாவட்ட திமுக-வே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பது, மற்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. “வாரிசுகளுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் திமுக-வுக்குப் பின்னடைவு” எனச் சொந்தக் கட்சியினரே புலம்புவது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக மாறியுள்ளது. இறுதி நேரத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு என்னவாக இருக்கும்? வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது ‘வெயிட்டிங் லிஸ்டில்’ இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks