சட்டமன்றத் தேர்தல் 2026: அவிநாசி தொகுதியில் போட்டியா? திருவொற்றியூர் கோவில்களில் எல். முருகன் வழிபாடு!

 சட்டமன்றத் தேர்தல் 2026: அவிநாசி தொகுதியில் போட்டியா? திருவொற்றியூர் கோவில்களில் எல். முருகன் வழிபாடு!

தியாகராஜ சுவாமி மற்றும் பட்டினத்தார் கோவில்களில் எல். முருகன் மனமுருகி வழிபாடு; அவிநாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் ஆன்மீகப் பயணம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய முகமும், ஒன்றிய இணை அமைச்சருமான திரு. எல். முருகன் அவர்கள் இன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.

ஆலய தரிசனம் மற்றும் வழிபாடு:

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தனித்தொகுதியான அவிநாசியில் எல். முருகன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சியின் உத்தேசப் பட்டியலில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இன்று காலை திருவொற்றியூர் வருகை தந்த அவர், வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில், தட்சிணாமூர்த்தி கோவில் மற்றும் புகழ்பெற்ற பட்டினத்தார் கோவில் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று நீண்ட நேரம் மனமுருகி வழிபட்டார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான மரியாதைகள் செய்யப்பட்டன.

செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்த அமைச்சர்:

வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சரைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, தேர்தல் அரசியல் மற்றும் அவிநாசி தொகுதிப் போட்டி குறித்துக் கேள்விகளை எழுப்பினர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, “அண்ணே வேண்டாம் அண்ணே.. கோவிலுக்கு வரும்போது நான் எப்போதும் பேட்டி கொடுப்பதில்லை. இது எனது ஆன்மீகப் பயணம். தேவைப்பட்டால் நானே உங்களை அழைத்துத் தகவல் கூறுவேன்” என்று கூறிச் செய்தியாளர் சந்திப்பை நாசூக்காக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் ஆன்மீக மரபுகளைப் பின்பற்றி அவர் காட்டிய இந்த நிதானம் அப்பகுதியில் இருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks