திமுகவிற்குத் தோல்வி பயம்! தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜய் கடும் எச்சரிக்கை!

திமுகவிற்குத் தோல்வி பயம்! தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜய் கடும் எச்சரிக்கை!

திமுகவின் அராஜகத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! தவெக நிர்வாகிகள் மீதான தாக்குதலுக்கு விஜய் கண்டனம்!

                 


பாரிமுனையில் கர்ப்பிணிப் பெண் உள்படத் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட அராஜகத் தாக்குதல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனைப் பகுதியில் தேர்தல் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியினர் நடத்தியத் தாக்குதலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கு மற்றும் வன்முறை அரசியல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக-வின் அரசியல் வருகை ஆளுங்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையே இந்தச் சம்பவங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில், நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு நிர்வாகிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் முழு உடல்நலன் பெற்று வீடு திரும்ப விழைகிறேன் எனத் தெரிவித்துள்ள விஜய், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "மக்களுக்காகக் களத்தில் பணியாற்றும் எமது நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இத்தகையத் தாக்குதலை நடத்தியிருப்பது கோழைத்தனமானச் செயல்" என அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

மேலும், தவெக-விற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக இவ்வாறான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். "இந்த அராஜகம் திமுக-வின் தோல்வி பயத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிகார பலத்தையும், ரவுடி அரசியலையும் கொண்டு எமதுப் பயணத்தைத் தடுத்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். இதற்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாகத் தக்க பாடம் புகட்டுவது உறுதி" என விஜய் எச்சரித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக-வினர் மாநிலம் தழுவியப் போராட்டங்களில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.



கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks