செத்துப்போன கோடீஸ்வரன் திரும்ப வந்துட்டாரா? ‘எப்ஸ்டீன் இன்னும் சாகல.. இஸ்ரேல்ல பதுங்கி இருக்காரு’ - மாஜி காதலி குண்டுவீச்சு!

செத்துப்போன கோடீஸ்வரன் திரும்ப வந்துட்டாரா? ‘எப்ஸ்டீன் இன்னும் சாகல.. இஸ்ரேல்ல பதுங்கி இருக்காரு’ - மாஜி காதலி குண்டுவீச்சு!

தற்கொலை செஞ்சது எப்ஸ்டீன் இல்லையா? - 30 லட்சம் பக்க ரகசிய ஆவணங்களை ‘எக்ஸ்போஸ்’ செய்த லேடி விக்டோரியா!

லண்டன்: உலகம் முழுவதும் ‘செக்ஸ் ரேக்கெட்’ புகாரில் சிக்கி அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், உண்மையில் சாகவே இல்லை என்றும் அவர் இஸ்ரேலில் பதுங்கியிருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் ‘பகீர்’ கிளப்பியுள்ளது. அவரது முன்னாள் காதலியும் சமூகவாதியுமான லேடி விக்டோரியா ஹெர்வி அளித்துள்ள இந்த பேட்டி, ‘கான்ஸ்பிரசி தியரி’ ஆர்வலர்களுக்குத் தீனி போடுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க பணக்காரராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைக் கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் கடந்த 2019-ல் கைது செய்யப்பட்டார். அப்போதே அவர் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக எப்.பி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அவரது மரணத்தில் ஏகப்பட்ட ‘லூப்ஹோல்’ இருப்பதாகத் தொடக்கம் முதலே விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், லேடி விக்டோரியா தற்போது ஒரு படி மேலே சென்று ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.


அவர் அளித்துள்ள ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டியில், “ஜெப்ரி எப்ஸ்டீன் இறந்துவிட்டதாகச் சொல்வதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் ரிலீஸ் செய்த 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களைச் சரியாகப் பார்த்தால் உண்மை புரியும். சிறை வளாகத்தில் நின்றிருந்த ஒரு வாகனத்தின் மூலம் பிணங்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மின்னஞ்சல் தான் இதற்குச் சாட்சி. அவர் இப்போது இஸ்ரேலில் மிக ரகசியமாகப் பதுங்கி வாழ்ந்து வருகிறார்” என ‘வெடிகுண்டை’த் தூக்கிப் போட்டுள்ளார்.


இதற்கிடையே, இஸ்ரேல் தலைநகரில் எப்ஸ்டீன் போன்ற தோற்றம் கொண்ட நபர் ஒருவர் நீண்ட தாடியுடன் உலா வரும் புகைப்படங்கள் ‘இன்டர்நெட்டில்’ காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அமெரிக்காவின் முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் உலகத் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் என்பதால், எப்ஸ்டீனைத் தப்பிக்க வைக்க ஏதோ ஒரு பெரிய ‘மாஸ்டர் பிளான்’ நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே ‘எப்ஸ்டீன் தீவு’ விவகாரத்தில் பல வி.ஐ.பி-களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக வரும் இந்தத் தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு ஒரு ‘மெகா ஹெடேக்’ ஆக மாறியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks