“தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பழிவாங்குகிறது!” திருச்சியில் செல்வப்பெருந்தகை அனல் பறக்கும் பேட்டி!

“தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பழிவாங்குகிறது!” திருச்சியில் செல்வப்பெருந்தகை அனல் பறக்கும் பேட்டி!

“பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் எனத் தெரிந்தே பட்ஜெட்டில் புறக்கணிப்பு” - ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதைக் கண்டித்து மெகா பேரணி; ஆட்சியில் பங்கு கேட்பது குறித்தக் கேள்விக்கு அதிரடிப் பதில்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று பிரம்மாண்டப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார்.

திருச்சி தெப்பக்குளம் காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில் அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிவேதித் ஆல்வா, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். பேரணி நிறைவில் நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில் பேசிய நிவேதித் ஆல்வா, "கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் காந்தி பெயரிலானத் திட்டத்தைச் சிதைக்க பாஜக முயல்கிறது" எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்துப் பேசிய திருநாவுக்கரசர், "காந்தியை ஏற்கனவே படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். தற்பொழுது அவரதுப் பெயரையும் நீக்கி மீண்டும் ஒருமுறை அவரைக் கொலை செய்கிறது. தங்கம் விலை உயர்வால் இனி பித்தளையில் தாலி கட்டும் அவலநிலை வந்துள்ளது; எனவே வரும் தேர்தலில் அரை பவுன் தாலி இலவசம் என்ற வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இறுதியாகப் பேசிய செல்வப்பெருந்தகை, "பாஜக ஆளாத மாநிலங்களின் நிதியைப் பறித்துப் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வாரி வழங்குகிறது. தமிழ்நாட்டின் உழைப்பைச் சுரண்டும் இந்த அரசு, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் வஞ்சித்துள்ளது. தமிழக மக்கள் பாஜக-அதிமுக கூட்டணியைப் புறக்கணிப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இந்தத் துரோகத்தைச் செய்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி கூறியது போல, தமிழக மண்ணைத் துளியும் பாஜக-வால் ஆள முடியாது" என முழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் எவ்வித இழுபறியும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். "நாங்கள் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை டெல்லித் தலைமை முடிவு செய்யும். நாங்கள் கேட்கும் இடங்களை ஒதுக்க திமுக தலைவருக்குப் பெரிய மனது உண்டு. எம்பிக்கள் தன்னைத் தாக்க முயன்றதாகப் பிரதமர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நாடாளுமன்றத்திற்கே வர அஞ்சும் பிரதமரைத் தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார். 'ஆட்சியில் பங்கு தருவதாகக் கூறும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?' என்றக் கேள்விக்கு, "நாங்கள் என்னப் பங்காளிகளா, பங்கு தருவதற்கு?" எனத் தனதுப் பாணியில் நறுக்கென்றுப் பதிலளித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks