ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் கடும் போட்டி; டேவிட் மில்லரை ₹2 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்!
அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கேமரூன் க்ரீன்னை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ₹25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரரான இவரை ₹25.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. இவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே கடும் போட்டி (Tough Competition) நிலவியது. மேலும், ₹16.5 கோடியை மட்டும் வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூட, ₹13.20 கோடி வரை இவருக்காகப் பந்தயம் கட்டியது.
தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர்ரை ₹2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது. முதல் ஆளாக ஏலத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மெக்குர்க்கை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. கேமரூன் க்ரீன் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது இந்த மினி ஏலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது
in
விளையாட்டு
