Goa Nightclub Fire: 25 உயிர்களைப் பலிகொண்ட தீவிபத்து - தாய்லாந்தில் பதுங்கியிருந்த உரிமையாளர்கள் இந்தியாவுக்கு எக்ஸ்ட்ராடிஷன்!

Goa Nightclub Fire: 25 உயிர்களைப் பலிகொண்ட தீவிபத்து - தாய்லாந்தில் பதுங்கியிருந்த உரிமையாளர்கள் இந்தியாவுக்கு எக்ஸ்ட்ராடிஷன்!

இண்டர்போல் உதவியுடன் புக்கெட் நகரில் சுற்றி வளைப்பு; இண்டிகோ விமானம் மூலம் டெல்லிக்கு அதிரடியாகக் கொண்டு வரப்பட்ட லூத்ரா சகோதரர்கள்!

புதுடெல்லி: கோவா மாநிலத்தின் அர்புரா கடற்கரை பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதியில் நேரிட்ட கோரத் தீவிபத்தில் 25 பேர் உடல் கருகிப் பலியான சம்பவத்தில், தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர்களைத் தாய்லாந்து நாடு இந்தியாவுக்கு நாடுகடத்தியுள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கத் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனவர்களை, இந்தியப் புலனாய்வு அமைப்புகள் சர்வதேச போலீஸ் உதவியுடன் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியுள்ளன.

கோவா பனாஜி அருகே உள்ள அர்புரா கிராமத்தில் நடந்த அந்தப் பயங்கர விபத்திற்குப் பிறகு, அதன் உரிமையாளர்களான கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகிய இருவரும் டெல்லியில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைக் பிடிக்க இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

கடந்த 11-ம் தேதி தாய்லாந்தின் புக்கெட் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவுக்காக அவர்கள் சென்றபோது, அங்குத் தயாராக இருந்த போலீஸார் அவர்களைக் கச்சிதமாகக் கைது செய்தனர். இந்த ஹை-புரொபைல் குற்றவாளிகளை இந்தியாவுக்குக் கொண்டுவரும் எக்ஸ்ட்ராடிஷன் பணிகளில் கோவா போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பலனாக, இன்று இண்டிகோ விமானம் மூலம் இருவரும் டெல்லி அழைத்து வரப்பட்டனர். 

இவர்களை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்ற பிறகு, மேல் விசாரணைக்காகக் கோவாவுக்குக் கொண்டு செல்ல போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த ஆக்சன் பேக்டு நடவடிக்கை, குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் கிரிமினல்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks