காட்பாடி ரயில் நிலையம்: ரயிலில் இருந்து தவறிய பெண்ணை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய RPF காவலர்! RPF Constable Saves Woman From Falling Under Moving Train at Katpadi Railway Station; CCTV Viral.

காட்பாடி ரயில் நிலையம்: ரயிலில் இருந்து தவறிய பெண்ணை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய RPF காவலர்! RPF Constable Saves Woman From Falling Under Moving Train at Katpadi Railway Station; CCTV Viral.

விபரீதம் ஏற்படுத்திய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்: பெண் சக்கரத்துக்குள் விழாமல் காப்பாற்றப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில், நேற்று (அக். 2) காலையில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த ஒரு பெண்ணை, அங்குக் கடமையில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமே தேவி (வயது 50) என்பவர், தனது உறவினர்களுடன் ஜார்க்கண்ட் செல்வதற்காகக் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். கோவையிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 11.53 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியுள்ளது. அப்போது, சாமே தேவி அவரது மகன் உதவியுடன் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த RPF வீரர் ஆதித்யா குமார், இந்த விபரீதத்தைப் பார்த்து, அந்தப் பெண் ரயிலின் சக்கரங்களுக்குள் விழாமல் தாங்கிப் பிடித்தவாறு சற்று தூரம் ஓடினார். அப்போது, அந்தப் பெண்ணை வெளியே இழுத்துக் காப்பாற்றும் முயற்சியில் ஆதித்யா குமார் ஈடுபட்டபோது, ரயிலின் வேகத்தில் அவர் எதிர்பாராதவிதமாக ரயில் சக்கரத்திற்குள் விழ முயன்றார். அந்த நேரத்தில், ரயிலில் இருந்த ஒரு பயணி உடனடியாகச் செயல்பட்டு, ஆதித்யா குமாரை லாவகமாகப் பிடித்து விபரீதம் ஆகாமல் காப்பாற்றினார்.

இதன் காரணமாக, ஆதித்யா குமார் ரயில்வே தண்டவாளத்திற்கும், நடைமேடை சுவற்றுக்கும் இடையே சிக்கிக் கொண்டார். உடனே அந்தப் பயணி உடனடியாக ரயிலின் அவசர காலச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இந்தப் போராட்டத்தின் விளைவாக RPF வீரர் ஆதித்யா குமாருக்குக் காலில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ரயிலில் விழ இருந்ததிலிருந்து காப்பாற்றிய ஆதித்யா குமாருக்கு, சாமே தேவியும் அவரது உறவினர்களும் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர். மேலும், இந்தப் பயணிகளின் பாதுகாப்புச் செயல்பாடு மற்றும் RPF வீரரின் துணிச்சலான முயற்சிக்குப் பொதுமக்களும், பயணிகளும் பாராட்டுகளைப் பொழிந்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks