சிறை மீண்ட 15 தமிழக மீனவர்கள்: விடுதலையான மகிழ்ச்சியில் சென்னைக்கு வருகை! 15 Tamil Nadu Fishermen Released from Sri Lankan Jail Arrive in Chennai; Express Distress.

சிறை மீண்ட 15 தமிழக மீனவர்கள்: விடுதலையான மகிழ்ச்சியில் சென்னைக்கு வருகை! 15 Tamil Nadu Fishermen Released from Sri Lankan Jail Arrive in Chennai; Express Distress.

தூதரக அதிகாரிகள் எங்களைப் பார்க்க வரவில்லை” – மன வேதனையுடன் மீனவர்கள் புகார்; அதிகாலை வந்தும் குடியுரிமைத் துறையால் அலைக்கழிப்பு. 

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுதலையாகி இன்று காலை ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகுத் தாய்மண் திரும்பிய மீனவர்கள், ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மறுபுறம் சில மனவேதனைகளையும் வெளிப்படுத்தினர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, கச்சத்தீவு, நெடுந்தீவு, தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு கட்டங்களாகக் கைது செய்யப்பட்டு, இலங்கையின் ஊர்க்காவல்துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களால் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மத்திய, மாநில அரசுகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த 15 மீனவர்களும் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்தியத் தூதரகக் கட்டுப்பாட்டில் உள்ள வெளிச்சாரா முகாமில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர்களுக்கு அவசரகாலப் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.

இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களுக்கு, குடியுரிமைச் சோதனை மற்றும் சுங்கச் சோதனை உள்ளிட்ட அனைத்துச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், வெளியே வந்த மீனவர்களை ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றுத் தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சூழலில், மீனவர்கள் சில குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். தாங்கள் சிறையில் இருந்தபோது, இந்தியத் தூதரக அதிகாரிகள் யாரும் வந்து தங்களைப் பார்க்கவில்லை என்று மனவேதனையுடன் தெரிவித்தனர். மேலும், தாங்கள் சென்னை விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கே வந்தடைந்தபோதும், குடியுரிமைத் துறை அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks