நாட்டையே 'அலறவிடும்' இமெயில் குண்டு மிரட்டல்கள்: 2 வருடங்களாக 'டார்ச்சர்' கொடுக்கும் விஷமிகள்! 500+ Bomb Threats via Email: Police Struggle to Track Miscreants Using VPN and Dark Web.

நாட்டையே 'அலறவிடும்' இமெயில் குண்டு மிரட்டல்கள்: 2 வருடங்களாக 'டார்ச்சர்' கொடுக்கும் விஷமிகள்! 500+ Bomb Threats via Email: Police Struggle to Track Miscreants Using VPN and Dark Web.

500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள்; விஷமிகளைப் பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை – 'அவுட்லுக், ஹாட்மெயிலுக்கு' கடிதம் அனுப்பியும் பதிலில்லை.

வெடிகுண்டு மிரட்டல்’ என்ற வார்த்தை ஒரு காலத்தில் நாட்டையே அலற வைக்கும் விவகாரமாக இருந்தது. ஆனால், சமீப காலமாகத் தினந்தோறும் மின்னஞ்சல் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகம் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த மின்னஞ்சல் மிரட்டல் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

இரண்டு வருடப் பணிச்சுமை: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தினந்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், முதல்வர் வீடு, நீதிமன்றங்கள், நடிகர்கள் வீடு, அமைச்சரின் வீடு, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது.

போலீசார் தரும் புள்ளி விவரத்தின்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. குறிப்பாக, outlook, hotmail உள்ளிட்ட பல்வேறு இமெயில் தளங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் போலி ஐடிகள் மூலம் 200க்கும் மேற்பட்ட முறை மிரட்டல் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்கள் காரணமாகப் போலீசாருக்குப் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது.

விஷமிகளைப் பிடிக்க முடியாத நிலை: இந்த விஷமிகள் வி.பி.என். (VPN) பயன்படுத்தி, டார்க் வெப் (Dark Web) மூலமாக மின்னஞ்சல் மிரட்டல் விடுத்து வருவதால், அவர்களைக் கண்டறிவதில் போலீசாருக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் சைபர் கிரைம் மூலமாக இந்த மெயில் ஐடியைத் ட்ராக் (Track) செய்யும் போது, அந்த லொக்கேஷன் ஒரு நொடியில் வேறு வேறு நாடுகளுக்கு மாறுவதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நீடிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மத்திய உள்துறை மூலமாகச் சம்பந்தப்பட்ட மெயில் நிறுவனங்களுக்கு (outlook, hotmail) கடிதம் அனுப்பியும், அவர்களுக்கு இதுவரையில் முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தினந்தோறும் மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் தொடர்வதால், சைபர் கிரைம் போலீசார், அந்தந்த காவல் நிலைய போலீசார் மற்றும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் எனப் பல பிரிவுகளும் இந்த வழக்குகளைப் பிரித்து விசாரித்து வருகின்றனர். மிரட்டல் புரளி என்று தெரிந்தாலும், ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கவும் முடியாமல் பாதுகாப்புப் படைகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks