சர்ச்சில் பெட்ரோல் குண்டு வீச்சு: போதை இளைஞர் கைது! Youth arrested for attacking church after being scolded by aunt

சர்ச்சில் பெட்ரோல் குண்டு வீச்சு: போதை இளைஞர் கைது!  Youth arrested for attacking church after being scolded by aunt

மது அருந்தியதை கண்டித்த சித்தி மீது ஆத்திரம்... காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் வெறிச்செயல்!

கொடுங்கையூரில் மதுபோதையில் தகராறு செய்ததை கண்டித்த சித்தி மீது ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், அவரது கணவர் நடத்தும் சர்ச் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த எலன் ரோஸ், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் பால்ஞானம், எருக்கஞ்சேரியில் உள்ள சிவசங்கரன் தெருவில் புனித சீயோன் கிருத்துவ சபையை நடத்தி வருகிறார். எலன் ரோஸின் அக்கா மகன் டக்ளஸ் பிரின்ஸ், தனது நண்பர்களுடன் சேர்ந்து எலன் ரோஸின் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்திவிட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, இதேபோல மது அருந்த வந்த டக்ளஸ் பிரின்ஸை, எலன் ரோஸ் கண்டித்து சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டக்ளஸ் பிரின்ஸ், தனது சித்தியை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எலன் ரோஸ், செம்பியம் காவல் நிலையத்தில் டக்ளஸ் பிரின்ஸ் மீது புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார் அளித்ததால் மேலும் ஆத்திரமடைந்த டக்ளஸ் பிரின்ஸ், நேற்று இரவு குடிபோதையில் மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார். பின்னர், தனது சித்தியின் கணவர் நடத்தி வரும் சர்ச் வாசலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினார். இதில் சர்ச் வாசலில் இருந்த செருப்பு ஸ்டாண்டு மற்றும் திரைச்சீலைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த டக்ளஸ் பிரின்ஸை கைது செய்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks