தனியார் நிறுவனத்தில் ₹6.47 லட்சம் மோசடி: கலெக்சன் ஏஜெண்ட் கைது! Employee arrested for ₹6.47 lakh fraud in private company

தனியார் நிறுவனத்தில் ₹6.47 லட்சம் மோசடி: கலெக்சன் ஏஜெண்ட் கைது! Employee arrested for ₹6.47 lakh fraud in private company

நிறுவனத்திற்கு வரவேண்டிய பணத்தை கையாடல் செய்த ஊழியர்... நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை!

ஒரு தனியார் நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாகப் பணிபுரிந்த ஒருவர், நிறுவனத்திற்கு வரவேண்டிய ரூ.6.47 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தண்டையார்பேட்டை, வ.உ.சி நகரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் குமரேசன் என்பவர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த தீபக் என்பவர், 2023 முதல் 2024 வரையில், கடைகளிலிருந்து வசூலித்த சுமார் ரூ.6,47,735/-ஐ நிறுவனத்திடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, குமரேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த தீபக்கை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு, மோசடி செய்த தீபக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks