தமிழக காவல்துறைக்கு புதிய டிஜிபி யார்? டெல்லியில் வரும் 26-ம் தேதி முக்கியக் கூட்டம்! Meeting to Select New Tamil Nadu DGP on 26th in Delhi

தமிழக காவல்துறைக்கு புதிய டிஜிபி யார்? டெல்லியில் வரும் 26-ம் தேதி முக்கியக் கூட்டம்! Meeting to Select New Tamil Nadu DGP on 26th in Delhi

காலியிடத்திற்குப் பொறுப்பு டிஜிபி நியமனம்... மத்திய தேர்வாணையத்தின் முடிவை எதிர்நோக்கும் தமிழகம்!

தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான முக்கியக் கூட்டம், வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதவியில் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக காவல்துறையின் படைத் தலைவரும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாகவே தமிழக அரசு இந்தப் பட்டியலை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம் 29-ம் தேதி, சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான தகுதிப் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. இந்தப் பட்டியலில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால், போலீஸ் உயர் பயிற்சிக் கழக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 26-ம் தேதி டெல்லி மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இனி யார் இருப்பார் என்பது இந்தக் கூட்டத்திற்குப் பிறகு உறுதியாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks