67 அடி உயர சிலை ராவணபுரத்தில் அமைந்துள்ளது; சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய மையம்!
இலங்கை: உலகின் மிகப்பெரிய இராவணன் சிலை இலங்கையின் ராவணபுரத்தில் அமைந்துள்ளது. இச்சிலை, 67 அடி (20.4 மீட்டர்) உயரத்துடன் கம்பீரமாக நிற்கிறது.
இந்த இராவணன் சிலை, பாரம்பரியத்தையும், நவீன கலைத்திறனையும் இணைத்த ஒரு அதிசயமாக விளங்குகிறது. இலங்கை கலாசாரத்தின் பெருமையை உலகிற்குத் தெரியப்படுத்தும் முக்கிய அடையாளமாக இது கருதப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான சிலையைப் பார்வையிட, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இது, அப்பகுதியின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கிறது.