தனிமையில் பழகி உல்லாசம் அனுபவித்ததாக புகார்; போலீசார் அதிரடி நடவடிக்கை!
கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவியின் தாயுடன் தவறான உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், நெல்லையைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்த 37 வயதான அப்துல் வகாப், டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளில் கராத்தே மற்றும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி மையங்களில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இவரிடம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் கராத்தே பயிற்சிக்கு வந்துள்ளார். தினமும் மகளை அழைத்து வந்த தாயுடன், தவறான நோக்கத்தில் பழகிய அப்துல் வகாப், நைசாகப் பேசி அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணுடன் தனிமையில் பழகி உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அப்துல் வகாப் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.