தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் இரண்டரை சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (40) என்பவர், ஜடையனூர் பகுதியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வந்துள்ளார். கண்ணம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், தண்ணீர் கேட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். கண்ணம்மாள் தண்ணீர் கொண்டு வரச் சென்றபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த இளைஞர்கள், சுமதியைத் துரத்திச் சென்று ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகே பிடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த குரிசிலாபட்டு போலீசார், சுமதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மூதாட்டியிடம் தந்திரமாக நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமதி வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.