நான் வீழ்வேன் என நினைத்தாயோ? எங்களை வீழ்த்த முடியாது!" – திருச்சி மாநாட்டில் துரை வைகோ ஆவேச முழக்கம்! Durai Vaiko's fiery speech MDMK conference in Trichy

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? எங்களை வீழ்த்த முடியாது!" – திருச்சி மாநாட்டில் துரை வைகோ ஆவேச முழக்கம்! Durai Vaiko's fiery speech MDMK conference in Trichy

அரசியல் எதிரிகளுக்கு பதிலடி, அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் மத்திய அரசை விளாசிய துரை வைகோ

திருச்சி சிறுகனூர் அருகே நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் விழா மாநாட்டில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆற்றிய அனல் தெறிக்கும் உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! நானும், மதிமுகவும் வீழமாட்டோம். பைத்தியக்காரப் பயல்களா எங்களை யாரும் வீழ்த்த முடியாது” என்று அவர் ஆவேசமாகக் கூறியது, விமர்சகர்களுக்கு நேரடியான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

பட்டம் பதவிக்காகவோ, பணம் ஈட்டவோ அரசியல் செய்யவில்லையெனத் தெரிவித்த துரை வைகோ, மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். தமிழகத்திற்கான நிதி, பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு வேண்டுமென்றே மறுத்துவருவதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதே நிலைதான் நீடிப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், மகாத்மா காந்தியின் நடைபயண அரசியலை முன்னெடுத்தவர் வைகோ எனவும், அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களுக்காகச் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் பெருமிதத்துடன் கூறினார்.

இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க மத்திய உள்துறை அமைச்சர் முயல்வதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் செயல் என்றும் துரை வைகோ சாடினார். அத்துடன், மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே பதவி பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் கடுமையாக விமர்சித்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks