Actor Robo Shankar Dead: தமிழ் திரையுலகில் சோகம்.. நடிகர் ரோபோ சங்கர் காலமானார்! Actor Robo Shankar passes away, film fraternity mourns

 Actor Robo Shankar Dead: தமிழ் திரையுலகில் சோகம்.. நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!  Actor Robo Shankar passes away, film fraternity mourns

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்; திரையுலகினர் அதிர்ச்சி! 

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பிரச்சினை காரணமாக நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காகத் தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

மிமிக்ரி கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரோபோ சங்கர், 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks