அவதூறுகளை நம்ப வேண்டாமெனக் குமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் வலியுறுத்தல்!
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைமை தொழில்நுட்ப அணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் த.வெ.க. நிர்வாகி அல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, த.வெ.க. குறித்து தவறான அவதூறுகளை மக்கள் மனதில் பதிய வைப்பதற்குச் சிலர் சதி செய்வதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நகை திருட்டு வழக்கில் கைதான மாணவிக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், த.வெ.க. மீது தேவையற்ற வீண் பழிகளைச் சுமத்த வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.