கணவன்-மனைவியாக வாழ்ந்துவிட்டு ஒதுக்குகிறார் - சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!
காதல், பாலியல் துன்புறுத்தல்; திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக திருநங்கை குற்றச்சாட்டு
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த என்ற திருநங்கை நடிகை, கடந்த 15 ஆண்டுகளாக 'இன்ஸ்பெக்டர் ரிஷி', 'மொட்ட சிவா கெட்ட சிவா' போன்ற திரைப்படங்கள் மற்றும் விஜய் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "நானும், நடிகர் நாஞ்சில் விஜயனும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, என்னுடன் பலமுறை பாலியல் உறவு கொண்டார். மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தினார். நான் அவருடன் பழகியது அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். இரவு நேரங்களில் இரண்டு-மூன்று மணி நேரம் வீடியோ காலில் பேசுவார். குழந்தை வேண்டும் என்று நான் கேட்டதால், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என்னுடன் வாழப் போவதாகக் கூறினார். ஆனால், இப்போது என்னை திருமணம் செய்ய முடியாது என்று ஏமாற்றிவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் திருநங்கை ஊடகங்களிடம் தெரிவித்தார். "காதலிக்கும்போது நான் ஒரு திருநங்கை என்பது அவருக்குத் தெரியாமல் இருந்ததாகவும், இப்போது என்னை ஒதுக்குகிறார். அவர் என்னிடம் பேச வேண்டும். என்னுடன் வாழ வேண்டும். அப்படி இல்லையெனில், சட்டம் எனக்கு நீதி வழங்க வேண்டும்," என்று அவர் கண்ணீருடன் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் நாஞ்சில் விஜயன் கேட்டபோது, "எனக்கு எதுவும் தெரியாது, அவர் யார் என்று தெரியாது," என முழுமையாக மறுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சூர்யா தேவி என்ற பெண்ணும் நாஞ்சில் விஜயன் மீது மிரட்டல் புகார் அளித்திருந்தார். அப்போது, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாஞ்சில் விஜயன், பின்னர் 2023ஆம் ஆண்டு தேசிய அரசியல் கட்சி பின்னணி கொண்ட மரியம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.