அரசுக் கேபிள் டிவியை முடக்குவது திமுகவின் குடும்ப நலனுக்காகவே - இபிஎஸ் குற்றச்சாட்டு! Tamil Nadu Government Cable TV Connections Drop, EPS Alleges

அரசுக் கேபிள் டிவியை முடக்குவது திமுகவின் குடும்ப நலனுக்காகவே - இபிஎஸ் குற்றச்சாட்டு! Tamil Nadu Government Cable TV Connections Drop, EPS Alleges

அதிமுக ஆட்சியில் 30 லட்சம் இணைப்புகள்; இன்று 14 லட்சமாகக் குறைந்தது - திருப்பூர் பிரசாரத்தில் இபிஎஸ்!


திமுக குடும்பத்தினர் கேபிள் டிவி தொழில் நடத்தி வருவதால், அவர்களின் லாபத்திற்காகவே அரசுக் கேபிள் டிவியை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

திருப்பூர் வடக்குத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய இபிஎஸ், "திமுகவின் குடும்பம் கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறது. அதற்காகவே, அரசுக் கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே அவர்கள் செயல்படுகிறார்கள்" எனக் கூறினார்.

மேலும், தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், சில புள்ளிவிவரங்களையும் அவர் முன்வைத்தார். அதிமுக ஆட்சியில் அரசுக் கேபிள் டிவிக்கு 30 லட்சம் இணைப்புகள் இருந்தன. நல்ல வருமானமும் கிடைத்தது. ஆனால், இன்றைய தினம், இந்த அரசின் அலட்சியத்தால், வெறும் 14 லட்சம் இணைப்புகள்தான் இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks