கடன் தொல்லையால் தறி தொழிலாளி மாயம்: ஓமலூர் அருகே பரபரப்பு! Power Loom Worker Missing in Omalur Due to Debt

கடன் தொல்லையால் தறி தொழிலாளி மாயம்: ஓமலூர் அருகே பரபரப்பு! Power Loom Worker Missing in Omalur Due to Debt

மனைவி வாங்கிய கடனால் ஏற்பட்ட தகராறு; செல்போன் சிம் கார்டை வீட்டில் வைத்துவிட்டு மாயமான தினேஷ்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மனைவி வாங்கிய அதிகப்படியான கடனால் ஏற்பட்ட தகராறில், தறி தொழிலாளி ஒருவர் கடந்த 10 நாட்களாக மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

பஞ்சு காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளி தினேஷ், தனது மனைவி தீபா வாங்கியிருந்த கடனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அவர் தனது செல்போன் சிம் கார்டை வீட்டில் வைத்துவிட்டு சென்றது, அவரது மாயமான சம்பவத்தில் மேலும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தினேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks