Nude Party: சத்தீஸ்கர் நிர்வாண விருந்து நிகழ்ச்சி: நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்குக் கோரிக்கை; ஒரு லட்சம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருந்த தம்பதிகள்! Nudist Party Planned in Chhattisgarh

Nude Party: சத்தீஸ்கர் நிர்வாண விருந்து நிகழ்ச்சி: நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்குக் கோரிக்கை; ஒரு லட்சம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருந்த தம்பதிகள்! Nudist Party Planned in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு: நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்குக் கோரிக்கை; ஒரு லட்சம் ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருந்த தம்பதிகள்!

திரைப்பிரபலங்கள் முதல் தம்பதிகள் வரை ஆர்வம்: பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு; 7 பேர் கைது!

சித்தரிப்பு காட்சிகள் 

ராய்ப்பூர்: ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நடப்பதுபோல, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிளப் மற்றும் பண்ணை வீட்டில் 'நிர்வாண விருந்து' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 7 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 21-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு, சில வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் மிகவும் ரகசியமாக வைத்திருந்ததுடன், செல்போன்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருவருக்கு தலா ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் பங்கேற்க காதல் ஜோடிகள் மற்றும் தம்பதியினர் ஒரு லட்சம் ரூபாய் வரை கூட கொடுக்கத் தயாராக இருந்துள்ளனர்.

மும்பை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்துச் சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியானதை அடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் குறித்துக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 7 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks