ஆர்கியன் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, குஜராத்தில் 25 இடங்களில் சோதனை வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மேற்கு மாம்பலம், தி.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உட்பட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தொழில்துறைக்குத் தேவையான முக்கிய கெமிக்கல்கள் தயாரிக்கும் Archean Chemical Industries ltd நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள், குஜராத் உள்ளிட்ட 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் இந்தச் சோதனையில், தி.நகர் வடக்கு கிரசண்ட் சாலையில் உள்ள ஆர்க்கியன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மேற்கு மாம்பலம் உமாபதி தெரு, வடபழனி அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்வார்பேட்டை மெரிடியன் பில்டர்ஸ், பட்டினப்பாக்கம் டிவிஹெச் பெலிசியா டவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஆண்டுக்கு ரூ.4,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம், தொழில் துறைக்குத் தேவையான முக்கிய இரசாயனங்கள், புரோமைன் மற்றும் சோடியம் பாஸ்பேட் போன்றவற்றைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் குஜராத் கிளைகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.