"ஸ்டாலின் திட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை.. கிராம அதிகாரிகளை மிரட்டுவதாக நபர் மீது புகார்: கோட்டாட்சியரிடம் மனு! Villagers File Complaint Against Person Threatening Govt Officials in Ranipet


வைரல் வீடியோக்களால் பரபரப்பான ஆற்காடு சாத்தூர் கிராமம்; கிராமத்திற்கு அவப்பெயர் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர்!


ஆற்காடு அருகே உள்ள சாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்போது, உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாபதி என்பவருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட கடும் தகராறு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெங்கடாபதிக்கு எதிராக திடீரெனக் கொதித்தெழுந்துள்ளனர்.

அவர் தொடர்ந்து கிராமத்திற்கு வரும் அரசு அதிகாரிகளை மிரட்டுவது, அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பது, மற்றும் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

வெங்கடாபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து கோட்டாட்சியரிடம் ஒரு "முக்கிய" மனுவினை வழங்கியுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!