போத்தீஸ் வருமான வரி சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்... வருமானவரித்துறை அதிரடி! Pothys owner Ramesh questioned for over 10 hours by I-T officials ₹18.5 crore cash seized

போத்தீஸ் வருமான வரி சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்... வருமானவரித்துறை அதிரடி! Pothys owner Ramesh questioned for over 10 hours by I-T officials ₹18.5 crore cash seized

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம்; 5 நாள் சோதனைக்குப் பிறகு ஐடி துறையின் பாய்ச்சல்.. நடவடிக்கை10 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை!

பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸின் உரிமையாளர் ரமேஷ், வருமான வரித்துறை அதிகாரிகளால் இன்று 10 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

கடந்த ஐந்து நாட்களாக, தமிழகம் முழுவதும் போத்தீஸ் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுவந்த சோதனை நிறைவடைந்த நிலையில், வருமானவரித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மெகா சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.18.5 கோடி ரொக்கப் பணமும், ரூ.12 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாபெரும் சோதனை வேட்டையில், கணக்கில் வராத சுமார் ரூ.30.5 கோடி சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை முடிந்த நிலையில், அபிராமிபுரத்தில் உள்ள ரமேஷின் வீட்டிலிருந்து நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் ரமேஷிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான வருமான வரி தாக்கல் கணக்கு ஆவணங்கள் குறித்து விரிவாகக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை, போத்தீஸ் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் குறித்த முக்கியத் தகவல்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks