மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிசில்டா: ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக ரங்கராஜ் மனு உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு Madhampatty Rangaraj moves Madras High Court against Joy Griselda

மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிசில்டா: ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக ரங்கராஜ் மனு உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு Madhampatty Rangaraj moves Madras High Court against Joy Griselda

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு!

அவதூறு கருத்துக்களை நீக்கக் கோரிக்கை; ₹12.5 கோடி இழப்பீடு என நிறுவனம் புகார்!


சென்னை, செப்டம்பர் 17: பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

கடந்த மாதம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரில், ரங்கராஜின் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இந்தச் செயலால் தனது நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகவும், வணிக ரீதியாகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு, ஜாய் கிரிசில்டாவின் கருத்துக்களால் 15 நாட்களில் ₹12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாதிட்டனர். மேலும், மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜாய் கிரிசில்டாவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியஸ்தத்திற்கு வர விரும்பவில்லை என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார். மேலும், ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் நிறுவனம் அவரைப் பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை குறித்து அவதூறாகப் பேசத் தடை விதிக்கக் கோரியும், வீடியோக்களை நீக்கக் கோரியும் தனி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாகக் கூறிய நீதிபதி, ₹12.5 கோடி இழப்பீடு எனக் கூறும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks