சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது! ₹20 Crore worth of cocaine seized at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது! ₹20 Crore worth of cocaine seized at Chennai Airport

சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்துக் கடத்தல் முயற்சி; மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் அதிரடி நடவடிக்கை!

ஆப்பிரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம்மூலம் கடத்தி வரப்பட்ட, சர்வதேச சந்தை மதிப்பில் சுமார் ₹20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து வந்த பயணிகள் விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், கென்யா நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.

அந்த இளைஞரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது உடமைகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் இருந்த சாக்லேட் பாக்கெட்டுகளைப் பிரித்துப் பார்த்தபோது, சாக்லேட் போலத் தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைனின் சர்வதேச மதிப்பு ₹20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞரைக் கைது செய்த அதிகாரிகள், போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்த, அவரைத் தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks