ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட முத்துசாமி!
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றிய முத்துசாமி, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு மனைக்கு வரன்முறை அங்கீகாரம் வழங்க முத்துசாமி ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை அவரிடம் கொடுத்து, கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முத்துசாமியை, பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
