பேரணாம்பட்டு அருகே ₹12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்! Narcotics Worth Rs. 12 Lakh Seized in Pernambut

பேரணாம்பட்டு அருகே ₹12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்! Narcotics Worth Rs. 12 Lakh Seized in Pernambut

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்; 5 பேர் கைது!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சுமார் ₹12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன்-க்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில், போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர்களான அஸ்லம் ஷெரிப், காஜா ஷெரிப் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ரஷீத் அஹம்மத், பைரோஸ் அஹம்மத் ஆகிய நான்கு பேரைக் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைரோஸ் அஹம்மதின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உடந்தையாக இருந்த பர்வேஸ் அஹம்மத் (33) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ரஹமதாபாத் பகுதியில் உள்ள ஜாஹீர் (46) என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கிலோ போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks