தண்டவாளம் ஒட்டிய 50 கி.மீ. தூரம் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தது!
கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, ரயில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.
இருகூர்-வடகோவை, வடகோவை-போத்தனூர், இருகூர்-போத்தனூர், மற்றும் வடகோவை-துடியலூர் என மொத்தம் 50 கிலோமீட்டர் தூரப் பகுதிகள் இந்தக் கேமராக்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கேமரா கண்காணிப்புடன், போலீசார் இரவு ரோந்துப் பணிகளையும், சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்துவது, கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவு போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே தண்டவாளங்களில் கற்களை வைப்பது மற்றும் ரயில்கள் மீது கற்கள் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
