வால்வோ காரில் ஏர்பேக் விபத்து.. காரில் எறும்பு புகுந்ததால் ஏர்பேக் வெடித்ததா..?: ரூ. 68 லட்சம் காரில் வினோத சம்பவம்! Ant Causes Volvo C40 EV Airbag Controversy in Chennai

 வால்வோ காரில் ஏர்பேக் விபத்து..  காரில் எறும்பு புகுந்ததால் ஏர்பேக் வெடித்ததா..?: ரூ. 68 லட்சம் காரில் வினோத சம்பவம்!  Ant Causes Volvo C40 EV Airbag Controversy in Chennai

குறைபாடுள்ள காரை விற்பனை செய்தது மோசடி என வால்வோவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உரிமையாளர்; சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக அறிவிப்பு!

சென்னையில், புதிதாக வாங்கப்பட்ட ரூ. 68 லட்சம் மதிப்புள்ள வால்வோ சி40 இ.வி. (Volvo C40 EV) காரில், எந்தவித விபத்தும் ஏற்படாத நிலையில், அனைத்து ஏர்பேக்குகளும் திடீரெனத் திறந்ததால் தொழில்அதிபர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளானார். இதுகுறித்து அவர் கேட்டபோது, ''எறும்பு ஒன்று காருக்குள் புகுந்ததால் சென்சார் கோளாறு ஏற்பட்டது'' என வால்வோ நிறுவனம் வினோத விளக்கம் அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபர் சுப்புராஜ் என்பவர், அண்ணாசாலையில் உள்ள வால்வோ ஷோரூமில் இஇந்தக் காரைவாங்கியுள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது, நங்கநல்லூர் சாலையில் திடீரெனக் காரின் அனைத்து ஏர்பேக்குகளும் ஒரே நேரத்தில் வெடித்துத் திறந்தன. இதனால் நடுவழியில் கார் அப்படியே நின்றுவிட்டது.

விபத்து எதுவும் ஏற்படாத நிலையில் ஏர்பேக்குகள் திறந்ததால் அதிர்ச்சியடைந்த சுப்புராஜ், இதுகுறித்து ஷோரூமுக்குத் தகவல் தெரிவித்தார். காரை ஆய்வு செய்த வால்வோ நிறுவனம், "கார் சென்சாருக்குள் எறும்பு ஒன்று நுழைந்ததால், அது விபத்து ஏஏற்பட்டதாகக் கருதி ஏர்பேக்குகள் திறந்தன'' எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, வெளிநாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால், அந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டுப் புதிய கார்கள் வழங்கப்பட்டதாகக் கூறிய சுப்புராஜ், தனக்கும் புதிய கார் வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால், பழுதுபார்க்கப்பட்ட அதே காரை எடுத்துச் செல்லுமாறு வால்வோ நிறுவனம் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, குறைபாடுள்ள காரை விற்பனை செய்தது மோசடி எனக் கூறி, தனது வழக்கறிஞர் மூலம் வால்வோ நிறுவனத்திற்கு சுப்புராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, காரை விற்பனை செய்த ஷோரூம் ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதமான சலுகையும், இந்திய வாடிக்கையாளர்களிடம் இழுத்தடிப்பும் செய்வதாக வால்வோ நிறுவனத்தின் மீது சுப்புராஜ் குற்றம்சாட்டியுள்ளதுடன், இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks