அதிவேக சண்டைக் காட்சிகளுக்காகத் தாய்லாந்தில் பயிற்சி பெற்ற தேஜா சஜ்ஜா; படம்குறித்துப் பேசியபோதுப் பெருமிதம்!
நடிகர் தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் ஃபேண்டசி திரைப்படமான "மிராய்", சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளதாகப் படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நானி, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை, பீபிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது.
தேஜா சஜ்ஜா பேச்சு:
மிராய் திரைப்படம்: ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன், மற்றும் டிவோஷன் நிறைந்த படம் இது. 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் ரசிக்கும்படியாக இப்படம் இருக்கும்.
சர்வதேச முயற்சி: "மிராய்" என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை என்று பொருள். இந்தியப் படங்களின் தரம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படம் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிவேக சண்டைக் காட்சிகள்: படத்தில் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகள் இடம்பெறும். அதற்காக, தாய்லாந்தில் 20 நாட்கள் பயிற்சி பெற்றேன். படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நேரடியாக நடித்துள்ளேன்.
வெளியீடு: இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.