350சிசி இருசக்கர வாகனங்களுக்கான 40% ஜிஎஸ்டி வரி ஏற்கத்தக்கதல்ல: ராயல் என்ஃபீல்ட்
தற்போது இந்திய இருசக்கர வாகனச் சந்தை உலக அளவில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஒரே சீரான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் என்ஃபீல்ட் பரிந்துரைத்துள்ளது.
மேலும், இந்த வரி மாற்றத்தின் மூலம் வளர்ந்து வரும் மின்சார வாகனச் சந்தையிலும் (Electric Vehicles) இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.