அடுத்த வாரம் திருமணம்... காதலன் வெட்டிக் கொலை: காதலன் சாவுக்கு நீதி கேட்டு கதறும் பெண்! Mayiladuthurai Love Story: Boyfriend Hacked to Death

அடுத்த வாரம் திருமணம்... காதலன் வெட்டிக் கொலை: காதலன் சாவுக்கு நீதி கேட்டு கதறும் பெண்! Mayiladuthurai Love Story: Boyfriend Hacked to Death
மர்ம கும்பலால் காதலன் கொடூரக் கொலை... கொதித்துப் போய் சாலை மறியலில் குதித்த காதலி!


மயிலாடுதுறையில் காதல் திருமணம் செய்யத் துணிந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து அவரது காதலியும் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்பவரை கடந்த பத்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். 

சென்னை ஷாப்பிங் மால் ஒன்றில் பணிபுரியும் மாலினியும் வைரமுத்துவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாலினியின் தாயார் விஜயா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மகளின் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவின் வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற மாலினியின் தாயார் விஜயா, அப்பவே உன்னைத் தட்டியிருக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, மாலினியின் குடும்பத்தினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, மாலினி, வைரமுத்துவை மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

இதனால், தங்கள் மகள் மாலினி தங்களுக்குத் தேவையில்லை என்று மாலினியின் குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, மாலினி வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றார்.

வைரமுத்து - மாலினி திருமணம் ஒரு வாரத்தில் நடைபெற இருந்த நிலையில், பதிவுத் திருமணத்திற்கான சான்றிதழ்களை எடுப்பதற்காக மாலினி சென்னைக்குச் சென்றுள்ளார். 
இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வைரமுத்துவை வழிமறித்த மர்ம நபர்கள், ஓட ஓட விரட்டி கொடூரமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வைரமுத்துவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, வைரமுத்துவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மாலினியின் தாய் விஜயா, அவரது சகோதரர்கள் குணால், குகன், சித்தப்பா பாஸ்கர் மற்றும் சுபாஷ், கவியரசன், அன்புநிதி உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சுபாஷ், கவியரசன் உள்ளிட்ட மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து, வைரமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு மருத்துவமனை அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து திரும்பி வந்த காதலி மாலினி, தோற்றுப் போய்விட்டோம் என்று கதறி அழுதபடி, தனது காதலனைக் கொலை செய்த தன் தாய் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி ஸ்டாலின், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks