பேருந்தை மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்: கேள்வி கேட்டதால் கைகலப்பு! Government Bus Stops Suddenly on Flyover: Clash Erupts

பேருந்தை மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்: கேள்வி கேட்டதால் கைகலப்பு! Government Bus Stops Suddenly on Flyover: Clash Erupts
கர்ப்பிணிப் பெண்ணுடன் பயணித்த இளைஞரைத் தாக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்: ஓங்கி ஒலித்த குரல்!


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே மேம்பாலத்தின் மீது திடீரென அரசுப் பேருந்தை நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் கார் ஓட்டுநர் ஒருவருக்குக் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நியாஸ் என்பவர், தனது ஏழு மாத கர்ப்பிணி மனைவியுடன் காரில் மதுரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். ஆவட்டி கல்லூர் கூட்ரோடு மேம்பாலத்தில், இண்டிகேட்டர் போடாமல் திடீரென வழிமறித்து அரசுப் பேருந்து நின்றதால், நியாஸ் அவசரமாகக் காரை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நியாஸ், காரை விட்டு இறங்கி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் இணைந்து நியாஸின் கார் கண்ணாடியை உடைத்ததோடு, அவருடன் வந்த ஒருவரைத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்குக் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், பேருந்தைச் சாலையின் குறுக்கே நிறுத்தி, அநாகரிகமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த பிற வாகன ஓட்டிகளும், பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதோடு, அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks