படத் தலைப்புக்கு வந்த சோதனை: நடிகர் தனுஷ் மேலாளர் வெளியிட்ட பகீர் தகவல்! Dhanush Manager's Controversial Speech: Who Is He Targeting?

படத் தலைப்புக்கு வந்த சோதனை: நடிகர் தனுஷ் மேலாளர் வெளியிட்ட பகீர் தகவல்! Dhanush Manager's Controversial Speech: Who Is He Targeting?
தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு புதிய விவாதம், நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா


படத்தின் பெயருக்கு ஏற்ப வழங்கப்பட்ட இட்லிகள் ஊசிப்போனதால், நிகழ்வில் சற்று குழப்பம் நிலவியது. அதைவிடப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் பேசியதாவது,

சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, திரையுலக வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழா, நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அப்போது, வந்திருந்தவர்களுக்கு, படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல், இட்லியும் மில்க் ஷேக்கும் வழங்கப்பட்டன. பசியெடுத்த சிலர் அதனை சாப்பிடத் தொடங்கியபோது, இட்லிகள் கெட்டுப்போய், துர்நாற்றம் வீசியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இட்லிக்கு பதிலாக வேறு நொறுக்குத் தீனிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேடையேறிப் பேசிய தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ், புகழின் உச்சிக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கடுமையாக உழைத்து முன்னேறுவது. இரண்டாவது, ஏற்கெனவே உச்சத்தில் இருப்பவரை வீழ்த்துவது என்று ஆவேசமாகப் பேசினார். 

மேலும், தனுஷ் சினிமாவில் வளர்த்துவிட்டவர்களே, இப்போது கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவரைத் தாக்குகிறார்கள். நேருக்கு நேர் மோதினால் பரவாயில்லை. ஆனால், வேறு வழிகளில் தாக்குவது சரியல்ல. தனுஷ் சார், உங்கள் தலைவர் சொன்னது போல நல்லவனாக இருங்கள். ஆனால், ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டாம் என்றும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

மேலாளர் பேசியதைக் கேட்டதும், அரங்கத்தில் இருந்த தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அதேபோல, தனுஷும், 300 போலி கணக்குகள் மூலம் என்னைப் பற்றி எதிர்மறை கருத்துக்களைப் பரப்புவதால் என்னைக் காலி செய்துவிட முடியாது. அப்படிப் பரப்புபவர்களும் எனது படத்தைப் பார்க்கத்தான் செய்வார்கள் என்று பதிலளித்தார். 

மேலாளர் மற்றும் தனுஷின் இந்தப் பேச்சுக்கள், மறைமுகமாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் குறிப்பதாகச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks