சென்னையில் களமிறங்கிய கான்பூர் கொள்ளைக் கும்பல்: ஏடிஎம்-மில் நுதனத் திருட்டு! Kanpur Gang Busted in Chennai for ATM Theft

சென்னையில் களமிறங்கிய கான்பூர் கொள்ளைக் கும்பல்: ஏடிஎம்-மில் நுதனத் திருட்டு! Kanpur Gang Busted in Chennai for ATM Theft

நாள் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் டார்கெட்... தகடு வைத்துத் திருடிய கும்பல்; ஒருவர் கைது!




சென்னையின் ஜெ.ஜெ. நகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு சிறிய தகடைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் திருடி வந்த கான்பூர் கொள்ளைக் கும்பல் ஒன்று, தற்போது போலீசாரின் வலையில் சிக்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் திருட வேண்டும் என டார்கெட் வைத்து இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், இரவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பணம் வெளியே வரும் பகுதியில் உள்பக்கமாக ஒரு அலுமினிய தகட்டை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அந்த ஏடிஎம்-க்கு வந்த வாடிக்கையாளர்கள், பணம் எடுக்க முயன்றபோது, பணம் வெளியே வராமல் தடையானது. ஆனால், அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், பலரும் தொழில்நுட்பக் கோளாறு எனக்கருதி, பின்னர் பணம் தானாக வரவு வைக்கப்படும் என நினைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து புகார்கள் வந்ததால், வங்கி மேலாளர் ஏடிஎம்-மில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் தகரத்தை வைத்துப் பணத்தைத் திருடியது அம்பலமானது. சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சிவா என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையின் விசாரணையில், கான்பூரிலிருந்து வந்த இந்தக் கும்பல் இதே பாணியில் சென்னையில் உள்ள நான்கு எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களின் கீழே உள்ள கதவு எளிதாகத் திறக்கும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததை அறிந்தே இந்தக் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் தற்போது தலைமறைவான மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.






கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks