காதல் திருமணம் செய்த மகளால் மன உளைச்சல்: பாஜக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! BJP functionary commits suicide after daughter's love marriage

காதல் திருமணம் செய்த மகளால் மன உளைச்சல்: பாஜக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! BJP functionary commits suicide after daughter's love marriage

காவல் நிலையத்தில் மகள் எடுத்த முடிவால் மனம் நொந்த தந்தை... நுங்கம்பாக்கத்தில் பெரும் சோகம்!

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்ட மகளின் செயலால் மனமுடைந்த பாஜக நிர்வாகி ஒருவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், காமராஜபுரத்தைச் சேர்ந்த பாபிஜி, முடிமாற்று அறுவை சிகிச்சை செய்பவர். அவர் பாஜகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பிறமொழிப் பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவரது இரண்டாவது மகள் மௌனிக்கா (21), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சுபேர் என்ற புவனேஸ்வரன் (26) என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மௌனிக்காவைக் காணவில்லையெனப் பாபிஜி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், மௌனிக்கா தனது காதலன் சுபேரைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானபோது, அதிர்ச்சியடைந்த பாபிஜி மற்றும் அவரது உறவினர்கள், அவர்களின் திருமணத்தை எதிர்த்துள்ளனர். ஆனால், மௌனிக்கா தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். மகளின் இந்தச் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாபிஜி, வீட்டிற்குத் திரும்பி வந்ததும், மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லட்சுமி, உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாபிஜியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் காதல் திருமணத்தால் தந்தை தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks