கி.வீரலட்சுமி பரபரப்புப் புகார்; சென்னை மேயர் பிரியாவுக்கு எதிரான அவதூறு வீடியோக்கள்: அரசியல் பின்னணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்! K. Veerlakshmi Alleges Political Conspiracy Behind Videos Against Chennai Mayor

கி.வீரலட்சுமி பரபரப்புப் புகார்; சென்னை மேயர் பிரியாவுக்கு எதிரான அவதூறு வீடியோக்கள்: அரசியல் பின்னணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்! K. Veerlakshmi Alleges Political Conspiracy Behind Videos Against Chennai Mayor

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நா.த.க., த.வெ.க. உள்ளிட்டோர் பின்னணியில் இருப்பதாகப் புகார்; நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி!


சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களைச் சமூக வலைதளத்தில் தவறாகச் சித்தரித்து அவதூறு பரப்பும் வீடியோக்கள் குறித்து, தமிழர் முன்னேற்ற படையின் நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி அவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு பகிரங்கப் புகார் மனு அளித்தார். இந்தப் புகார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரலட்சுமி, சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சியில் மேயராகப் பணியாற்றி வரும் பிரியாவைச் சமூக வலைதளத்தில் மிகவும் ஆபாசமாகச் சித்தரித்து வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் மத்தியில் அதிகம் தலைகாட்டாத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைக்கூட பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் தவறாகச் சித்தரிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். மேயர் பிரியா ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மேலும், இந்தப் வீடியோக்களுக்குப் பின்னால் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த வீடியோக்களைப் பரப்பும் பல நூறு ஐடி விவரங்களுடன் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆபாச வீடியோக்களைப் பரப்பும் நபர்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் கி.வீரலட்சுமி வலியுறுத்தினார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks