ஜூலை 16 முதல் மாயமான ரங்கராஜ்; பல பெண்களுடன் தொடர்பு, கடனில் மூழ்கியவர்; ஜாய் பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" மூலம் புகழ்பெற்ற ரங்கராஜ் குறித்த திடுக்கிடும் தகவல்களை ஜாய் கிறிசில்டா தனது பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஜாய் கிறிசில்டா அளித்த பேட்டியின்படி, ரங்கராஜ் ஜூலை 16 அன்று "குக் வித் கோமாளி" ஷூட்டிங்கிற்காகச் சென்றுவிட்டு அதன் பிறகு திரும்பி வரவில்லை. அவருக்கு ஏற்கெனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஜாய் கூறினார். ரங்கராஜ் ஒரு பணக்காரர் என்ற வதந்தியை மறுத்த அவர், ரங்கராஜுக்கு நிறைய கடன் இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் தொடர்பைத் துண்டித்ததாகவும் தெரிவித்தார். ரங்கராஜ் தனது பழைய ஆடி காரை மாற்றி புதிய பி.எம்.டபிள்யூ. கார் வாங்கித் தந்ததாகவும், ஆனால் அதன் EMI-ஐ ஜாய் தான் கட்டி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விஷயத்தை வெளியில் சொல்ல பல மாதங்கள் பயந்ததாகவும், ஆனால் தனது தாய் கொடுத்த தைரியத்தின் காரணமாகவே இதை வெளிப்படையாகப் பேச முடிந்தது என்றும் ஜாய் குறிப்பிட்டார். ரங்கராஜ் மீது காவல் துறையில் புகார் அளித்து நியாயம் கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.