ஜப்பான் அரசியலில் ஓர் அதிசயம்!: கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு; தொடர் தோல்விகளுக்குப் பின் ஒரு புதிய முயற்சி! Japan Political Party Appoints AI Leader

ஜப்பான் அரசியலில் ஓர் அதிசயம்!: கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு; தொடர் தோல்விகளுக்குப் பின் ஒரு புதிய முயற்சி! Japan Political Party Appoints AI Leader

பென்குயின் எனப் பெயரிடப்பட்ட அந்த ஏ.ஐ. தொழில்நுட்பம்; உலக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்!


உலகின் பல துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டுவரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தற்போது அரசியல் உலகிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. ஜப்பானில் உள்ள ஒரு பிராந்தியக் கட்சி, தங்களது கட்சித் தலைவராக ஒரு செயற்கை நுண்ணறிவை நியமித்து உலக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

மீண்டும் பிறப்பதற்கான பாதை (Path to rebirth) என்ற பெயருடைய அந்தக் கட்சி, அண்மையில் நடந்த நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட 10 இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. தொடர் தோல்விகளின் காரணமாக, கட்சித் தலைவராக இருந்த இஷிமரு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த தலைவராக 'பென்குயின்' என்று பெயரிடப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏ.ஐ. அமைப்பை உருவாக்கிவரும் கோகி ஒகுமுரா என்ற மாணவர், இந்த வியக்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டதுடன், ஏ.ஐ.க்குத் தேவையான உதவிகளையும் தான் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். பென்குயின், எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் இருக்கும் என்பது குறித்து வரும் நாட்களில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, ஒரு அரசியல் கட்சி மனிதருக்குப் பதிலாக ஒரு தொழில்நுட்பத்தை நம்பி இந்த முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது, அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை அரசியல் உலகிலும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks