தமிழக வெற்றிக் கழகம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!Tamilaga Vettri Kazhagam: New office bearers appointed by Vijay

தமிழக வெற்றிக் கழகம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!Tamilaga Vettri Kazhagam: New office bearers appointed by Vijay

விஜய் அறிவிப்பு; நிர்மல் குமார், ராஜ்மோகன் முக்கியப் பதவிகளில் நியமனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு புதிய பொறுப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நியமனங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குறித்த விவரங்கள்:

* திரு. C.T.R. நிர்மல் குமார் (மதுரை): கழக இணைப் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர். இவர், தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி, மற்றும் வழக்கறிஞர் அணிகளின் கூடுதல் பொறுப்புகளைக் கவனிப்பார்.

* திரு. A. ராஜ்மோகன் (பெரம்பலூர்): துணைப் பொதுச்செயலாளர். இவர் ஊடக அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நான்கு பேர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்:


* திருமதி C. விஜயலட்சுமி (நாமக்கல்)

* திரு. M. அருள்பிரகாசம் (சென்னை)

* திரு. டாக்டர் A. ஸ்ரீதரன், Ex. MLA. (திருநெல்வேலி)

* திருமதி M. சுபத்ரா (தூத்துக்குடி)

இந்த புதிய நிர்வாகிகள் அனைவரும், கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை இணைந்து மேற்கொள்வார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks